இரவு புழுக்கம்
தாங்காமல் மாடியல் வந்து படுத்த பொழுது மணி பன்னிரண்டு-க்கு மேல் இருக்கும். தூரத்தில்
மாட்டு வண்டி செல்லும் சத்தம் , ஏனோ மாட்டை வண்டிக்காரன் அடிக்கும் சத்தம் சற்று பலமாகவே கேட்டது . அழகான தென்றல் காற்று வீசும் விதம் இசையை போலவே இருந்தது. இது போன்ற இனிமையான
உணர்வை அவன் இதுவரை உணர்ந்தது இல்லை . வானத்தை
பார்த்து கொண்டே படுத்திருந்த அவனுக்கு நிலவு வழக்கத்தை விட பிரகாசமாகவே தெரிந்தது.
அவனையே மறந்து அவன் ரசிக்க துவங்கினான் .
பல்லவர்கள் கால சிற்பத்தில்
ஒன்று உயிர் பெற்று வந்தால் கூட அவள் அழகிற்கு ஈடாகாது . பொதுவாக இளைஞர்களை தாக்கும்
அதே நோய் அவனையும் தாக்கிருந்தது. ஆம் அவன் காதல் கொண்டது அவன் கல்லூரி தோழி மீதுதான் .அவன் தன் விருப்பத்தை சொல்ல நினைத்த போது, அவள் சொல்லி விட்டு
சென்றாள் "மறக்காமல் என் திருமணத்திற்கு வந்து விடு " என்று .
இவற்றையெல்லாம் நினைத்து
கொண்டே உறங்கும் போது அவன் கண்ணீர் துளியல் பிரகாசித்து கொண்டே கரு மேகத்தில் தன் பயணத்தை
துவங்கினால், நிலா.
அவனும் உறக்கத்தில் என்றாவது ஒரு நாள் நிலவின்
தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன்
.............
நிலா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக