Powered By Blogger

ஞாயிறு, 17 மார்ச், 2013

நிலா




                                      இரவு புழுக்கம் தாங்காமல் மாடியல் வந்து படுத்த பொழுது மணி பன்னிரண்டு-க்கு மேல் இருக்கும். தூரத்தில் மாட்டு வண்டி செல்லும் சத்தம் , ஏனோ மாட்டை வண்டிக்காரன் அடிக்கும் சத்தம் சற்று பலமாகவே  கேட்டது . அழகான தென்றல் காற்று  வீசும் விதம் இசையை போலவே இருந்தது. இது போன்ற இனிமையான உணர்வை அவன் இதுவரை உணர்ந்தது  இல்லை . வானத்தை பார்த்து கொண்டே படுத்திருந்த அவனுக்கு நிலவு வழக்கத்தை விட பிரகாசமாகவே  தெரிந்தது.  அவனையே மறந்து அவன் ரசிக்க துவங்கினான் .
                               பல்லவர்கள் கால சிற்பத்தில் ஒன்று உயிர் பெற்று வந்தால் கூட அவள் அழகிற்கு ஈடாகாது . பொதுவாக இளைஞர்களை தாக்கும் அதே நோய் அவனையும் தாக்கிருந்தது. ஆம் அவன் காதல் கொண்டது அவன் கல்லூரி தோழி  மீதுதான் .அவன் தன் விருப்பத்தை சொல்ல நினைத்த போது, அவள் சொல்லி விட்டு சென்றாள் "மறக்காமல் என் திருமணத்திற்கு வந்து விடு " என்று .
                         இவற்றையெல்லாம் நினைத்து கொண்டே உறங்கும் போது அவன் கண்ணீர் துளியல் பிரகாசித்து கொண்டே கரு மேகத்தில் தன் பயணத்தை துவங்கினால், நிலா.
                    அவனும் உறக்கத்தில் என்றாவது ஒரு நாள் நிலவின் தரிசனம் கிடைக்காதா  என்ற ஏக்கத்துடன் .............
நிலா 

                      

அம்மா


                            அம்மா

காடு,மேடு
சுற்றித்திரிந்தேன்
தவம் புரிந்தேன்!
வந்தார் கடவுள்
என்ன வேண்டும் என்றார்!
நீர் எப்போதும் என்னுடன்
வேண்டும் என்றேன்
ஆகட்டும் என்று மறைந்தார்!
எழுப்பு மணி ஒலித்தது!
விழித்து கொண்டேன்
கையில் காப்பி குவளையுடன்
அம்மா!..
நினைத்து கொண்டேன்
எப்போதும் என்னுடன்
கடவுள்
அம்மாவாக!..